Republic Day Celebration
பிள்ளையார்புரம் சிவந்தி ஆதித்தனார் கல்லூரியில் 76-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் தென்குமரி கல்விக்கழகத் தலைவரும், சிவந்தி ஆதித்தனார் கல்லூரியின் தலைவருமான என்.காமராஜ் தலைமை தாங்கி தேசியக் கொடியினை ஏற்றிவைத்து தலைமையுரையாற்றினார். கல்லூரி முதல்வர் அருணா வரவேற்புரையாற்றினார். கல்லூரியின் செயலாளர் ராஜன் குடியரசு தின சிறப்புரையாற்றினார். துணைத்தலைவர் கனகராஜன் வாழ்த்துரை வழங்கினார் .
விழாவில் தென்குமரி கல்விக்கழகத் துணைத்தலைவர் சந்திரசேகர் , செயலாளர் வெற்றிவேல், பொருளாளர் நாராயணராஜா, ஸ்ரீ வைகுண்டர் பாலிடெக்னிக் கல்லூரியின் தலைவர் வெற்றிவேலன், செயலாளர் சுப்ரமணி, இணைச்செயலாளர் கனகநாதன், கல்லூரி ஆட்சி மன்ற உறுப்பினர்கள் சுபாஷ், முரளிமனோகர்லால், இனியன்தம்பி போன்றோர் கலந்து கொண்டனர். குடியரசு தினப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் சசிகலா நன்றியுரையாற்றினார். நிகழ்ச்சியில் அனைத்து துறைத் தலைவர்களும், பேராசிரியர்களும், அலுவலகப் பணியாளர்களும், மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டனர்.